எ.குமாரமங்கலம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் கிராமத்தில் அருட்பிரகாச ஜோதி வள்ளலார் கல்வி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு அறக்கட்டளை தலைவர் முனைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சிவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் ரஜினி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அய்யங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமினை சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் துவக்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் குமரவேல், ஷிவானி, பவித்ரா ஆகியோ கொண்ட மருத்துவ குழுவினர் 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொதுமருத்துவம் மற்றும் கண், காது சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். இதில் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் இரமேஷ்பாபு, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் இதயத்துல்லா, வட்டார தலைவர் பெரியசாமி, சத்தியமூர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, ஆசிரியர் கமலாலட்சுமி, சிவப்பிரகாசம், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் பாலி அய்யாதுரை ஏற்பாட்டின் பேரில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
No comments